தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இயற்கை மரணம் அடைந்துள்ளார். அவரது பிரதத்தை கைப்பற்றி விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என தெரிய வந்தது. காரிமங்கலம் காவல் நிலைய காவலர் ராஜேஷ் குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், தமிழ்செல்வன்,சண்முகம், முஹம்மத் ஜாபர் ஆகியோர் இறந்தவரின் புனித உடலை தங்கள் உறவாக எண்ணி இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 99 புனித உடல்களை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
