கர்மவீரர் காமராசர் அவர்கள் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி பிறந்தார். இவர் 1954 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் 9 ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். அப்போது தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராசர் அவர்கள் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். மேலும் இவரை,தென்னாட்டு காந்தி,படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் அழைப்பார்கள். இவரை அனைவரும் கருப்பு காந்த என்றும் அன்போடு அழைக்கப்பட்டார்.இவர் ஐந்துக்கு மேற்பட்ட அணைகளை கட்டி விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

1976 ஆம் ஆண்டு காமராஜர் உயிரிழந்தார். அப்போது இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் வைக்கப்பட்டது.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவர் நேர்மையாகவும், எளிமையானவராகவும், பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அதற்கு தகுந்தவாறு திட்டங்களை தீட்டினார்.
முக்கியமாக பொது மக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வெகு விரைவாக திட்டங்களை தீட்டி குறைகளை நிவர்த்தி செய்தார்.

அதற்குப் பின்னால் அரசியல் கட்சித் தலைவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காமராஜரை போல் ஆட்சி செய்வோம் எனக் கூறி பிரச்சாரமே செய்கின்றனர்.
அதன் பிறகு ஆட்சியில் அமர்ந்தால் காமராசரை போல் ஆட்சி செய்யாமல் அவரவர் போக்கில் ஆட்சி செய்கின்றனர்.

மீண்டும் தேர்தல் வந்தால் மீண்டும் அவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால் காமராஜரை போலவே ஆட்சி செய்வேன் எனக் கூறி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன.
காமராசர் காமராசர் தான்.
காமராசர் ஆட்சி காமராசர் ஆட்சி மட்டுமே தான்..
எத்தனை தலைவர்கள் வந்தாலும் காமராசரை போல் யாராலும் ஆக முடியாது என்ன தெரிகிறது…

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *