தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிய அரசு பேருந்து ஒன்று தர்மபுரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிது தூரம் சென்று கொண்டிருந்தபோது மேடான பகுதியில் அரசு பேருந்து ஏறி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் எம் சென்ட் ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரி எதிர்பாராத விதமாக முன்னாள் வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் சிறிய காயம் இன்றி உயிர்த்தபினர்.விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பெரும்பாலை போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.

