தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள தொப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் பிரவீன் குமார்(26). இவர் பிஇ படித்து முடித்துவிட்டு தருமபுரியிலேயே வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தாயார் தவமணி மகனிடம் வெளி ஊருக்கு சென்று வேலை செய்ய மாட்டியா என திட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் மன வேதனையில் இருந்த பிரவீன் குமார் நேற்று வீட்டில் ஆளில்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்த போது தூக்கி சடலமாக இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூருக்கு சென்று வேலை செய் என தாய் திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
