தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி தகடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(45), லாரி டிரைவர். இவருக்கு நாகம்மாள் (50), நஞ்சம்மாள் (47) என்ற சகோதரிகள் உள்ளனர். நாகம்மாளின் மகள் கீதா(33) என்பவரை மாதேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நஞ்சம்மாள் கணவரை பிரிந்து 20 வருடங்களாக தனியே வசித்து வந்தார். இந்நிலையில், மாதேஷின் மனைவி கீதா. கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு இரண்டு தெரு தள்ளி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வசித்துவருகிறார்.மனைவி பிரிந்து சென்று விட்டதால், மாதேஷ் குடிப்பழக் கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்து வந்தார். மேலும் குடும்பத்தில் நிலம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இதனிடையே அளவுக்கதிகமாக மது குடித்ததால், மாதேசுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை நஞ்சம்மாள் மருத்துவ செலவு செய்து காப்பாற்றினார்.
இதனையடுத்து,மாதேஷ் தனது வீட்டின் அருகில் உள்ள சுமார் 6 சென்ட் நிலத்தை, அக்கா நஞ்சம்மாள் பெயருக்கு எழுதி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவரது மனைவி கீதா மற்றும் அக்கா நாகம்மாள் ஆகியோர், மாதேசுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். நேற்று முன் தினம் நஞ்சம்மாள் தங்கியிருந்த வீட்டின் வெளியே மாதேசும், நஞ்சம்மாளும் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்த தகவலின் பேரில், அதிய மான்கோட்டை போலீசார்,2 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, சொத்து தகராறில் மனைவி கீதா,மாதேஷ் மற்றும் நஞ்சம்மாளை கூலிப்படை வைத்து வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் நாகம்மாள், கீதா ஆகியோரிடம் போலீசார் விசாரித்ததில், ஒருவருக்கொருவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறி வந்தனர். இது போலீசாருக்கு அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் அதே பகுதியில் மொபைல் சிக்னல், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அக்கா,தம்பி இருவரையும் வெட்டி கொலை செய்துவிட்டு கூலிப்படை கும்பல் மதுரைக்கு தப்பி ஓடி உள்ளனர். இதனை கண்காணித்த போலீசார் மதுரை சென்று ஐந்து பேரை மடக்கி பிடித்து கைது செய்து அழைத்து வந்தனர்.
அதன் அடிப்படையில் மனைவி கீதா(33),மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, பொன் பெருமாள் தெரு பகுதியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் ரங்கநாதன்(33),மதுரை மாவட்டம், ராமநாயக்கன்பட்டி, கிரிமேட்டு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் சந்துரு(26),மதுரை மாவட்டம், குணசேகரன் கோட்டை பொன் பெருமாள் தெரு பகுதியைச் சேர்ந்த வேங்கை பிச்சை மகன் ஆறுமுகம்(40),மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, பேட்டை புதூர் பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் கோபிநாத்(40),மதுரை மாவட்டம், டி. வாடிப்பட்டி, மேட்டு பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஹரி ராமச்சந்திரன்(36)தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி, எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்த பொன்னியம்மாள்(61) மற்றும் கூலி ஆட்களை ஏற்பாடு செய்ய துணையாக இருந்த பொம்மிடி பகுதியைச் சேர்ந்த கள்ளக்காதலன் சண்முகத்தையும் கைது செய்தனர்
இதுகுறித்து போலீசார் கூறுகையில்;
மாதேஷ் லாரி டிரைவராக வேலை செய்வதால் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று விடுவார். இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திய மனைவி கீதா பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி மாதேஷிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டிற்கு அருகாமையில் இரண்டு தெருக்கள் தள்ளி தனியாக வீடு கொண்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இந்த நிலையில் தனிமையில் இருந்த மாதேசுக்கு உடல்நிலை சரியில்லாத போதும் பார்த்துக் கொண்டு, தினமும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். இதனால் மாதேஷ் அக்காவிற்கு 6 சென்ட் நிலத்தை எழுதிக் கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த கீதா கணவர் மாதேசியிடம் அடிக்கடி தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அதற்கு முன்பு ஏற்கனவே ஒரு நிலத்தை விற்று,அதற்குக் கிடைத்த பணத்தை கீதா, அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு மற்றும் இரண்டு அக்காவிற்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனால் தொடர்ந்து இருக்கும் நிலங்களை விற்று காலி செய்து விடுவார் என கீதா நினைத்துள்ளார். இதனால் கார்மென்சில் பணிபுரிந்த போது பெண் தோழி மூலம் பொம்மிடி பகுதியைச் சார்ந்த சண்முகம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி பழகி வந்துள்ளனர். அதன் பிறகு கணவர் மாதேஷ் எப்படியாவது கொலை செய்து விட வேண்டும் எனக் கூறி சண்முகத்திடம் உதவி கேட்டுள்ளார். அதனடிப்படையில் சண்முகம் லாரி ஓட்டும்போது பழக்கம் ஏற்பட்ட ரங்கநாதனை தொடர்பு கொண்டு மாதேசை கொலை செய்வதற்கு 6 லட்சம் ரூபாய் விலைப் பேசி உள்ளனர்.

இதனால் மாதேஷ் மற்றும் நஞ்சம்மாளை கொலை செய்வதற்காக பல நாட்கள் முயற்சி செய்தும் கொலை செய்ய முடியவில்லை. அதன் பிறகு மாதேஷ் லாரி ஓட்டுவதற்காக சென்றுவிட்டார். இந்த நிலையில் சம்பவத்துக்கு முன்பு இரண்டு நாட்கள் முன்பு தான் லாரியிலிருந்து இறங்கி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த கீதா கணவன் வீட்டிற்கு வந்ததை நோட்டமிட்டு கூலிப்படையிடம் தகவல் ஜூன் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் மதுரையில் இருந்து பேருந்து மூலம் வந்து சம்பவ இடத்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டனர். அன்று இரவு சுமார் 12 மணி அளவில் மாதேஷ் மற்றும் நஞ்சம்மாள் வீட்டில் வெளியே அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சென்று தூங்கிக் கொண்டிருந்த இருவரின் கழுத்துப் பகுதியில் பலமாக அருவாளால் வெட்டி உள்ளனர். இதனால் இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். அதன் பிறகு அனைவரும் அங்கிருந்து தப்பித்து சொந்த ஊருக்கே திரும்பிச் சென்று விட்டனர் என கூறியுள்ளனர்.
நஞ்சாமாலின் வீடு ரயில்வே தண்டவாளம் அருகாமையில் இருந்ததால் அந்த வழியாக ரயில் வரும் வரை காத்திருந்தனர். அந்தத் தண்டவாளத்தில் ரயில் வந்த போது அதனை சந்தர்ப்பமாக பயன்படுத்தி திடீரென சென்று தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பேரின் களத்தில் வெட்டி உள்ளனர். ரயில் சென்ற போது சம்பவம் நடந்ததால் சத்தம் எதுவும் அருகில் இருந்த வீடுகளுக்கு கேட்காமல் இருந்துள்ளது.
