டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்று முறையில் செயல்படுத்த வேண்டும்-டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

59 அரசு மதுபான கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் மனு கொடுத்து காலி மது பாட்டில்கள் வாங்குவதை மாற்று ஏற்பாடு செய்யும் வரை,வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த மனுவில்;

மூன்றாண்டு காலமாக டாஸ்மாக் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தினை மாற்று வழியில் செயல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தும் நிர்வாகத்திடம் கருத்துக்களை முன்வைத்தும் இது நாள் வரை ஊழியர்களின் குரலுக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இந்த காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தின் மூலம் பணியாளர்கள் அளவு கடந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். போதிய இடவசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். தங்கள் உத்தரவின் பேரில் ஒரு கடையில் 7 நாட்களுக்கான சரக்கு இருப்பு கையில் உள்ளது. அதற்கு தேவையான இடம் மட்டும் தான் உள்ளது. அதே சமயம் காலி அட்டைப் பெட்டி வைப்பதற்கான இடமும் அதற்குள்ளாக வைத்துக்கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல்” காலி பாட்டிலும் அங்கே வைக்க வேண்டும். பணியாளர்கள் ஒரு கடைக்கு ஐந்து நபர்கள் பணி செய்ய போதிய இடமில்லை. ஒவ்வொரு தனி பாட்டிலுக்கும் பத்து மூபாய் திரும்ப கொடுக்கும் பொழுது சில்லறை தட்டுப்பாடு மிகவும் சிரமமாக உள்ளது. மூட்டைகளை கையாளும் பொழுது உடையும் பாட்டிலுக்கு இது நாள் வரை கழிவு வழங்கவில்லை.

எனவே வருகின்ற 31.05.2026 வரைக்கான காலி பாட்டில் வரவு செலவுக்கான விபரங்களையும் இதற்குண்டான ஸ்டிக்கர் அனைத்து பதிவேடுகளையும் தங்களிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்பதை தெரிவிப்பதுடன் 01.06.2026 முதல் காலி பாட்டில்களை நாங்கள் திரும்ப பெற மாட்டோம் என உள்ளது.

குறிப்பு:

  1. எங்களின் பிரதான கோரிக்கைகளான காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தினை டாஸ்மாக் ஊழியர்கள் மீது திணிக்காமல் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்.
  2. கட்டிட உரிமையாளர்களிடம் சமூகமான முறையில் பேசி கூடுதல் இட வசதி வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
  3. கடையில் விற்கப்படும் சரக்கு பாட்டிலுக்கும் பத்து இருபது ரூபாய் கொடுக்க சில்லறை தட்டு பாட்டினை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *