இன்று டீக்கடைக்கு வந்து டீ சாப்பிடலாம் என அமர்ந்தோம். அப்பொழுது டீ மாஸ்டரை பார்த்து இன்று என்ன தகவல் வந்துள்ளது என கேட்டேன்.
மாஸ்டர்
தர்மபுரி கனிமவளத்துறை மற்றும் புவியியல்,சுரங்கத் துறை அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று மாவட்டம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட மண் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த மண் குவாரிகள் பட்டா நிலங்களில் அனுமதி பெற்ற நிலையில் அரசு அனுமதி கொடுத்த அளவில் ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு எடுக்கப்படும் மண்ணை கட்டிட தேவைகளுக்காகவும், விவசாய நிலங்களை சமன்படுத்துவதற்காகவும், தாழ்வான பகுதிகளை உயர்த்துவதற்காகவும் மேலும் பல்வேறு தேவைகளுக்கு டிப்பர் லாரிகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
மண் குவாரியில் இருந்து மண் தேவைப்படுபவர்கள் தூரத்தைப் பொறுத்து ஒரு லோடுக்கு ரூ.2500 முதல் ரூ.4000 வரை விற்பனை செய்கின்றனர். இவர்கள் ஜேசிபி, டிப்பர் வாங்குவதற்கு வங்கியிலேயும், உறவினர்கள் முறையிலும், வட்டிகாரர்களிடமும் கடனுடனை வாங்கி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கே ஒரு லோடுக்கு 1000 ரூபாய் கிடைப்பதே பெரியதாக இருக்கும்….
அரசு அனுமதி அளித்துள்ள அளவில் எடுத்து வருகின்றனர். அப்படியே அரசு விதிமுறையை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள்.
ஆனால் அரசியல் பிரமுகர் பின்புலத்தை பயன்படுத்தி நாங்கள் சென்னையில் இருந்து வந்ததாக கூறி ஒரு குரூப் மண் குவாரி உரிமையாளர்களிடம் ஒரு லோடுக்கு 800 ரூபாய் கொடுக்க வேண்டும் என மிரட்டி கட்டாய மாமுல் வசூல் செய்கின்றனர். இது பற்றி அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் அவர்கள் மேல் இடத்தில் இருந்து வருகிறார்கள் என சொல்றாங்களாம்….
கடந்த காலத்தில் இதுபோன்று மண் குவாரி உரிமையாளர்களிடம் ஒரு லோடுக்கு 600 ரூபாய் வரை மாறுதல் வசூல் செய்துள்ளனர்.
மேலும் தேர்தலுக்கு நிதி வேண்டும் என தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் மண் குவாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்களிடம் பல கோடி ரூபாய் வசூலும் நடந்துள்ளது.
இவர்கள் மாமுல் வசூல் செய்தது அரசு பெயரை சொல்லி மாப்பியா கும்பலே வசூல் செய்தார்களா அல்லது அதிகாரிகளே இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்…
தற்போது தமிழ்நாட்டின் புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடர்ந்து போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதேபோன்று மண்குவாரி உரிமையாளர்களை மிரட்டி மாமுல் வசூல் செய்யும் மாப்பியா கும்பல் மீதும் நடவடிக்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம் என தெரிவித்தார்…..
அதன் பிறகு நாங்கள் சாப்பிட்ட டீக்கும் தின்பண்டங்களுக்கும் பணத்தை கொடுத்துவிட்டு நாளை வருகிறோம் என கூறிவிட்டு வந்து விட்டோம்….
