தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையம் விசாரணைக்கு வரவழைத்து உறவினர் முன்னிலையில் கட்டிட மேஸ்திரியை அடித்த பெண் போலீஸ்.மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொ*லைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி ஊராட்சி கோம்பேரி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(33). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.இவருக்கு அதே ஊரை சேர்ந்த சந்தியா(29) ஆகிய இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கணவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தரப்பில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரை விசாரிக்க, தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் முனுசாமியை நேற்று காவல் நிலையம் வரவழைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்திய பெண் போலீசார் ஒருவர், கட்டிட மேஸ்திரியை உறவினர்கள் முன்னிலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மன உளச்சலுக்கு ஆளான கட்டிட மேஸ்திரி முனுசாமி, காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி வி*ஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் முனுசாமியை மீட்டு சிகிச்சைக்காக, நல்லம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறுக்கு விசாரணைக்கு காவல் நிலையம் வந்தவரை பெண் போலீசார் அடித்ததில், கட்டிட மேஸ்திரி விஷம் குடித்து தற்கொ*லைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீஸ் வட்டாரம் கூறியதாவது:
தர்மபுரி காவல்துறைக்கு எதிராக எந்த செய்தி வெளிவந்தாலும் அதற்கு எப்படி அறிக்கை விட வேண்டும் என எங்களுடைய தலைமைக்கு நன்றாகவே தெரியும். நடந்ததை நடக்கவில்லை எனவும், பேசியதை பேசவில்லை எனவும், ஆபாச வார்த்தையை ஆபாச வார்த்தை இல்லை எனவும், கள்ள காதலன் உறவினர்களுடன் இளம் பெண்ணை அனுப்பி வைத்ததை இல்லை எனவும் அறிக்கை விடுவது எங்களுக்கு ஒன்றும் புதியதல்ல என கூறுகின்றனர்.
ஒரு சம்பவம் நடைபெற்றால் அது குறித்து மாவட்ட காவல்துறை உரிய விசாரணை நடத்தி தவறு செய்பவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அரசியல் கட்சிகள் போன்று அறிக்கை விடுவதையே வேலையாக வைத்து உள்ளனர் என பொதுமக்கள் பேசி வருகின்றனர்…
