தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் தேவா குரூப்ஸ் நிறுவனங்கள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நிர்வாக இயக்குனர் எல்கே.செங்கதிர் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப்பாளராக வந்த தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் மற்றும் கலைமாமணி திரைப்பட நடிகை தேவயானி ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தேவா மருத்துவமனையை முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் கேபி. அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தேவா கண் மருத்துவமனை மற்றும் ஆப்டிகல்ஸ்யை தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் திறந்து வைத்தார். தேவா சீட் பிரைவேட் லிமிடெட் இதனை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார். மேலும் கடல் ஷாப்பிங் மற்றும் லைப் மேட்ரிமோனி தமிழ் இதனை ஒன்றிய கழக செயலாளர் என்.ஜி.எஸ். சிவபிரகாசம் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, அதிமுக மருத்துவ அணி நிர்வாகி அசோகன் மற்றும் நல்லம்பள்ளி சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடன் இருந்தனர்.

