தற்பொழுது எஸ்பி.வெங்கடேஸ்வரன் பாட்டாளி மக்கள் கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராகவும்,தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். தருமபுரி தொகுதியில் நடக்கும் அனைத்து இரங்கல் நிகழ்விற்கும் உடனடியாக சென்று விடுவது இவருடைய பழக்கம்.
அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார். அதன் பிறகு அதே இடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்.
கம்மம்பட்டி ஊராட்சியில் 30 ஆண்டிற்கு மேலாக பரிகம் முதல் மலையூர் காடு வரை சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சாலை அமைக்கும் பணிக்கு தருமபுரி எம்எல்ஏ பலமுறை சட்டமன்றத்தில் பேசி சாலை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.

தருமபுரி எம்எல்ஏ வை தொகுதி சார்ந்த பொதுமக்கள் நேரடியாக சந்திப்பதற்கு மிகவும் எளிமையாக இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனால் மீண்டும் இவர் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக அதிமுக மற்றும் பாமக தொண்டர்கள் பரவலான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
