தருமபுரி கிராம விழிகள் அறக்கட்டளை சார்பாக மாபெரும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் தர்மபுரி முத்து நினைவு அறக்கட்டளை அலுவலக வளாகத்தில் மார்ச் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொது மக்களுக்கு தேவையான சட்ட ரீதியில் ஏற்படும் சந்தேகங்களை தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருக்கும். இந்த முகாமிற்கு உரிமையியல் சட்டங்களும், நீதிமன்ற நடைமுறைகளும், தன் வழக்கில் தானே நேரில் நின்று வழக்கு நடத்துவது எப்படி என்பது குறித்தும், நுகர்வோர் சட்டங்களும் தீர்ப்புகளும் குறித்த வழிமுறைகளும் தெரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தர விருப்பமுள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 95973 76088 என்ற நம்பரை தொடர்பு கொள்ளவும்.
