2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வுடன், பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று,
நல்லம்பள்ளியில் இரு கட்சியினர் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில், அன்புமணி தலைமையிலான பா.ம.க கட்சி இணைந்ததை வரவேற்று, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பேருந்து நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க மற்றும் பா.ம.க கட்சியினர் ஒன்றிணைந்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. பா.ம.க ஒன்றிய செயலாளர்கள் அன்புகார்த்திக், முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், பா.ம.க மாநில அமைப்பு செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மணி, காமராஜ், குப்பன், மாது, கோபி முருகன், தமிழரசன், சரவணன், சதீஷ் உள்ளிட்ட அ.தி.மு.க, பா.ம.க, இரு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

