தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஹள்ளி பகுதியில் 500-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி பொதுமக்கள் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் புதிய பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை முன்னாள் கவுன்சிலர் சோனியா காந்தி வெங்கடேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் வெங்கடேஷன், ஏ.ஜெட்டிஹள்ளி முன்னாள் வார்டு உறுப்பினர் சின்னசாமி, ஊர் பொதுமக்கள் பழனி, சரோஜா, திருநாவுக்கரசு, ஹரி,தேவன், அன்பு மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *