filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.5181749, 0.45660704);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (23, 0);aec_lux: 73.656784;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 40;

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது இண்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் இண்டூர் பகுதியில் சுமார் 55 ஏக்கர பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் முழுவதும் சீமை கருவேலம் மரங்கள் நிறைந்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் சுமார் 10 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்தும் பயன்படுத்தி வந்தனர். இதன் காரணமாக இண்டூர் பகுதியை சேர்ந்த ஆதி பவுண்டேஷன் தன்னார்வு அமைப்பு மூலம் சுத்தப்படுத்தி பூங்கா மற்றும் மினி தீவுகள் அமைக்க மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் பேரில் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் மேற்பார்வையில் ஏரியை சீரமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

இதில் முதல் கட்டமாக ஏரி முழுவதும் இருந்த சீமை கருவேலாம் மரங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இடங்களையும் அகற்றி ஏரி முழுவதும் வலுவான கரை அமைக்கப்பட்டுள்ளது. ஏரி கரைகளைச் சுற்றி 5000 மரங்கள் நடவு செய்ய பணி தொடங்கிய நிலையில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் முதல் மரத்தை நட்டு வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

அதன் அடிப்படையில் தற்பொழுது வரை சுமார் 1000க்கு மேற்பட்ட பழவகை மரங்கள் அத்தி, இலுப்பை, நாவல், நிழல் தரும் மரங்களான அரசமரம், அசோக மரம், புங்கன் மரம் மற்றும் பல வகையான மரங்கள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியின் நடுவில் மூன்று நீர் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பறவைகள் சரணாலயம் போன்று அமைப்பதற்காக மூன்று சேர்க்கை தீவுகள் அமைத்து அதில் மரங்கள் நடவு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் முற்றிலுமாக முடிந்த நிலையில் இண்டூர் ஏரி மிகவும் இயற்கை சூழ்நிலை ஏற்றவாறு மினி தீவுகள் அமைப்பதாலும் பறவைகள் சரணாலயம் போன்று அமையும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.



By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *