சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கொத்தாபுள்ளயானூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(49). இவர் வெள்ளக்கல் சுங்க சாவடி அருகே ஹோட்டலில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு வருவதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் தருமபுரியை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளக்கல் சுங்கர் சாவடி அருகே வந்தபோது அதிவேகமாக வந்த பிக்கப் வாகனம் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் டூவீலரில் வந்த பெரியசாமி தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
