filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0003,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 124.05026;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்அள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வெளியில் செல்வதற்காகவும், விவசாய நிலங்களில் விளையக்கூடிய பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும் பாப்பன்னன் குட்டையில் இருந்து தண்டுகாரம்பட்டி இனைப்பு சாலை வரை உள்ள மண் சாலையை பயன்படுத்தி வந்தனர்.

இந்த மண் சாலையானது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்டதின் காரணமாக மழையில் மண்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் கல்கற்கள் தெரியும் வண்ணம் உள்ளது.இந்த மண் சாலையை பயன்படுத்து பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

இதனால் பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2025-2026 கீழ் 10.70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 500 மீட்டர் ஜல்லி சாலை அமைக்கும் பணியானது நேற்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாமக ஒன்றிய செயலாளர் மா.முருகன்,ஒன்றிய துணை செயலாளர் தவமணி, இளைஞர் அணி தலைவர் கோடீஸ்வரன்,இளைஞரணி துணைச் செயலாளர் ஐஜி.அருண்குமார்,பசுமை தாயகம் சுப்பிரமணி,கிளைச் செயலாளர் கந்தசாமி மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.




By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *