filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:0.0000,0.0000; brp_del_sen:0.0000,0.0000; motionR: 0; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.3864289, 0.5314732);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 119.6066;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 33;

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ளது குன்மாரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் நிரம்பி இருக்கும். இதனால் விவசாயத்தையே நம்பி உள்ள சுமார் 200 ஏக்கர் மேல் உள்ள விவசாய நிலங்கள் பயன் பெற்று வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் இருப்பதினால் ஏரிக்கு வரும் மழைநீர் குறைந்துள்ளது. இதனால் வழக்கத்தை விட குறைந்த மழை நீரே ஏரிக்கு வருகின்றது. அப்படியே இருந்தாலும் ஏரியில் பரவி இருக்கும் கருவேலம் முற்கல் ஏரியில் இருக்கும் குறைந்த தண்ணீரை கூட உறிஞ்சி விடுகின்றது. இதனால் ஏரியில் இருக்கும் தண்ணீர் 3 மாதங்களுக்கு கூட இருப்பதில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ‌ விவசாய கிணறுகளிலும் தண்ணீர் குறைவதால் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் விவசாயங்களில் நலனை கருத்தில் கொண்டு ஏரிக்கு வரும் மழைநீர் கால்வாயை தூர்வாரி ஏரியில் நிறைந்துள்ள முற்ச்செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *