கூலிக்கொட்டாய் கிராமத்தில் விநாயகர்,மாரியம்மன்,சாமனேரி முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் அருகே உள்ள கூலிக்கொட்டாய் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஸ்ரீ விநாயகர் கோவில், ஸ்ரீ மாரியம்மன் கோவில், சாமனேரி முனியப்பன் கோவில் ஆகியவை புதியதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த கோவில்களுக்கு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றம் செய்து முளைப்பாலிகை இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி ஊரில் உள்ள பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

14ஆம் தேதி திங்கட்கிழமை தீர்த்த குடம், பால்குடம், முளைபாலிகை அழைப்பு மேளம் தாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.16ஆம் தேதி புதன்கிழமை சக்தி கலசங்கள் ஆலயம் வளம் வந்து மாரியம்மன் விமான கோபுரம் மூலவர், விநாயகர், முனியப்பன் ஆலயத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை அனைத்து பக்தர்களும் வழிபட்டு சென்றனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவினை ஊர் கவுண்டர்கள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தினர்.


