தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜருகு அடுத்த அரசு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி சிறப்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் நேற்று அரசு பள்ளிகள் திறந்த நிலையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர். இதேபோன்று தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பொடாரன்கொட்டாய் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மாணவர்கள் நேற்று வந்தனர். இதனால் பள்ளியின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காகவும், அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பாக மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஏசி.முருகன், சந்தோஷ், பிரவின், விக்னேஷ். பள்ளி மேலாண்மை குழு தலைவி ரேவதி மற்றும் உறுப்பினர்கள், மாரிமுத்தம்மாள், பவித்ரா மற்றும் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். வரவேற்பு விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், உதவி ஆசிரியர் இன்பசேகரன் ஏற்பாடு செய்திருந்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *