தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி கமலநத்தம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இந்த பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமலநத்தம் விஜயன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்த எஸ்கே.துரைசாமி அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் சௌந்தர்ராஜன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
