தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி கடுதுகாரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜலபதி(30). இவர் தர்மபுரி தனியார் கிளினிக்கில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக பிரேமா(25) என்ற பெண்ணுடன் திருமணமானது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. அதன் பிறகு இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தினால் இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்த பிரேமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனால் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மன வேதனையில் கணவர் ஜலபதி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் துக்கம் தாங்காமல் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் பிரதிநிதி கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, உடல் கூறு ஆய்வு முடிந்த பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இருந்த துக்கம் தாங்காமல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *