தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்டது அதியமான் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் தேர் திருவிழாவானது நாளை முதல் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனால் கோவில் அருகே உள்ள ஆழ்துளை குழாய் பழுதாகி பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதனால் ஆழ்துளை குழாயை பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் கோரிக்கையின் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் பழுதடைந்த ஆழ்துளை குழாயை இந்திரன் மூலம் பராமரிப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதனால் காளியம்மன் கோவில் தேர் திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விரைவாக ஆழ்துளை குழாயை ஊராட்சி செயலர் திருவருட்செல்வம் சீரமைத்ததால் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *