தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 32 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில் அதிகப்படியான பொதுமக்கள் விவசாயம் சார்ந்த தொழிலையே செய்து வந்து தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மிகவும் பின்தங்கி இருப்பதினால் ஓலை வீடுகள் மற்றும் குடிசை வீடுகளில் தங்கி வருகின்றனர்.

இவர்களை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு மூலம் வழங்கக்கூடிய கலைஞர் கனவு இல்லம் மற்றும் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவச வீடு கட்டுவதற்கான நிதியை வழங்குகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளிகள் வீடு கட்ட தொடங்கியவுடன் அவர்களுக்கான நிதி உதவியை அரசு வழங்குகின்றது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் கட்டி வரும் வீடுகளை நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள உதவி பொறியாளர்கள் மேற்பார்வை செய்து வருகின்றன. இவர்களுக்கு உதவியாக இருக்கும் தின கூலி அடிப்படையில் செயல்படும் பணியாளர்கள்(NMR) பொதுமக்களிடம் பில் தொகையை செலுத்துவதற்காக அதிகாரிகளுக்கு ரூபாய் 5000 முதல் 10000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே உங்களுடைய பில் தொகை பாஸ் ஆகும் எனச் சொல்லி பணம் கேட்கின்றன.

அவர்கள் கேட்ட தொகையை பயனாளிகள் தர மறுத்துவிட்டால் பயனாளிகளுக்கு செலுத்த வேண்டிய பில் தொகையை நிலுவையில் வைக்கின்றனர். இதனால் அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகள் பாதியிலேயே நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசின் மூலம் வழங்கக்கூடிய இலவச வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *