தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது 2005-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தை குறித்து மக்களிடையே இன்று வரை போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே மக்களை அரசியல் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் கிராம விழிகள் அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது. இதில் ஒரு பகுதியாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 23.02.2025 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 4.00 மணிக்குள் தருமபுரி 4 ரோடு அருகே உள்ள வன்னிய குல சத்திரியர் திருமண மண்டபத்தில் ஒரு நாள் இலவச சட்டபயிற்சி வகுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வகுப்பில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து, இந்த பயிற்சி வகுப்பை திறம்பட மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டு செயல்பட துடிக்கும் இளைஞர்கள்,ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள்,அரசுத் துறைகளில் மனுவை அளித்து எந்த ஒரு பதிலையும் பெற முடியாமல் தங்களுடைய மனுக்களின் நிலையை குறித்து அறிய விரும்பும் சாமானியன், பல்வேறு துறைகளுக்கு மனுக்கள் அளித்து மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என சலித்து கொண்டு உள்ளவர்கள், தேர்தலில் வாக்களித்துவிட்டு மக்கள் பிரதிநிதி நமது பகுதிக்கு எதுவும் செய்யவில்லை என அவர்களோடு மல்லுக்கட்டும் இளைஞர்கள் என அனைவரும் வகுப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
வெங்கடாசலம்-9597376088
