தொப்பூர் அருகே மூன்று லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்தில் மூன்று பேர் படுகாயம் போக்குவரத்து பாதிப்பு.
கர்நாடகா மாநிலத்திலிருந்து துவரம் பருப்பு ஏற்றிய லாரி ஒன்று சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சேலத்தைச் சேர்ந்த நீலமோகன் (37) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தொப்பூர் கட்டமேடு அருகே நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது அதற்கு பின்னால் பூனோவில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரியும் வந்து கொண்டிருந்தது. இதற்குப் பின்னால் கெமிக்கல் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இந்த மூன்று லாரிகளும் கட்ட மேடு அருகே வரும் பொழுது ஒன்றன் பின்னால் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் துவரம் பருப்பு லாரியில் வந்த சேலத்தை சேர்ந்த நீலமோகன், இரும்பு பாரம் லாரியில் வந்த சேலத்தைச் சேர்ந்த அங்கமுத்து (43) சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தினர். இந்த விபத்தில் டேங்கர் லாரியில் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த நியாஸ் முகமது (53) இடர்பாடுகளில் சிக்கி கால் முறிந்து மாட்டிக்கொண்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்க சாவடி பணியாளர்கள் விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்ட டிரைவரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு விபத்துக்குள்ளான லாரிகளை மீக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
