தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சங்கத்தில் 500 பணியாளர்கள் இணையும் விழா இண்டூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதம்மாள் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி மற்றும் மாநில பொது குழு உறுப்பினர் சந்திர மாது வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக வந்த TNPSA மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், எழுச்சிப்பேருறை ஆற்றினார், மாநில தலைவர் கிருஷ்ணன் வரவேற்பு எழுச்சி உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் திருவருட்செல்வன் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கணேசன்,ஒன்றிய பொருளாளர் ,ஜம்பேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

