தர்மபுரி மாவட்டத்தில் காவேரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தர்மபுரி மாவட்டம் முழுவதும் வருகின்ற 4 ஆம் தேதி அரை நாள் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் நல்லம்பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நல்லம்பள்ளி பேருந்து நிலையம், டாட்டா நகர், இலளிகம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார்.

அப்போது பொதுமக்கள் அடியே பேசும்போது காவிரியில் ஆண்டுதோறும் சராசரியாக 50-100 டிஎம்சி தண்ணீர் உபரிநீராக கடலில் கலக்கிறது. அதில் 3டிஎம்சி நீரை பயன்படுத்தி குடிநீர், பாசன ஆதாரங்களை மேம்படுத்துவதே தருமபுரி காவேரி உபரிநீர் திட்டத்தின் நோக்கமாகும். ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு இணையாக குழாய்களை அமைத்து இதை செயல்படுத்தலாம். தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்று விட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 அணைகளுக்கு போதிய நீர் கிடைப்பதில்லை. இந்த காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் கூடுதலாக பாசன வசதி பெறும்.

தர்மபுரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் 9 ஒன்றியங்கள் பயனடையும். மேலும் கிணறுகளில் 50 அடி அளவுக்கு, ஆழ்துளை கிணறுகளில் 100 அடிக்கும் நீர்மட்டம் உயரும். இந்த திட்டத்தினை கொண்டுவர பொது மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு கொடுத்து தர்மபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ள அரை நாள் முழு கடை அடைப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறி ஆதரவை திரடடினார்.

அப்போது நல்லம்பள்ளி ஒன்றிய தெ.கி செயலாளர் அறிவு, மத்திய செயலாளர் முருகன், கிழக்கு செயலாளர் அன்பு கார்த்திக், சின்னசாமி, தெற்கு செயலாளர் ராஜீவ் காந்தி மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *