நல்லம்பள்ளி அருகே விளையாட்டுப் போட்டிக்கு சென்று வீடு திரும்பிய மாணவர்களை அரசு பேருந்தில் இருந்து சட்டையை பிடித்து கீழே இறக்கி விட்டதால் பெற்றோர்கள் அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பாக 2024-25 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை தருமபுரி மாவட்ட ஆட்சி தலைவர் சாந்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருந்து பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் இருந்து 12 மாணவர்கள் கபாடி போட்டிற்காகவும், 7 முதல் 8 வகுப்பு படிக்கும் மாணவர்கள் 12 பேர் கோ கோ போட்டிக்காகவும் சென்றிருந்தனர்.

விளையாட்டுப் போட்டிகள் முடிந்த பிறகு கோ கோ போட்டிற்கு சென்றிருந்த 12 மாணவர்களும் நெசவர் காலனி பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்றிருந்தபோது அந்த வழியாக பாளையம் புதூர் அருகே உள்ள காமராஜர் நகருக்கு செல்லும் 41 நம்பர் அரசு பேருந்தில் ஏறி உள்ளனர். அந்த பேருந்தில் இருந்த நடத்துனர் மந்திரி மாணவர்களிடம் பஸ் பாஸ்யை எங்கே, எங்கு செல்கிறீர்கள் என கேட்டுள்ளார்.

அதற்கு ஒரு மாணவன் நான் தொம்பரக்கம்பட்டிக்கு செல்ல வேண்டும் எனவும் மற்றொருவன் பாளையம் புதூருக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

அதற்கு நடத்துனர் இந்த பேருந்து தொம்பரக்காம்பட்டிக்கு போகாது உங்களிடம் பஸ் பாஸ் இல்லை கீழே இறங்குங்கள் என சட்டையை பிடித்து தோக்கம்பட்டி பேருந்து நிலையத்திலேயே இறக்கி விட்டுள்ளார். அங்கேயே நின்றிருந்த மாணவர்கள் பின்னால் வந்த 19 நம்பர் அரசு பேருந்தில் ஏறி உள்ளனர்.

அந்த பஸ்ஸில் இருந்த நடத்துனர் ஏன் இங்கு ஏறி உள்ளீர்கள் என கேட்டதற்கு நடந்த விவரத்தை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து இந்த நடத்துனர் 41 வது நடத்துனரிடம் போனில் தொடர்பு கொண்டு மாணவர்களை கூட்டிச் செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

அதனால் கக்காஞ்சிபுரம் பகுதியில் நின்றிருந்த 41 வது பேருந்தில் மாணவர்களை மீண்டும் ஏரி டிக்கெட் எடுத்துக்கொண்டு பாளையும்புதூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அதற்கு முன்பாக மாணவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் பாளையம் புதூர் 4 ரோடு பகுதியில் பெற்றோர்கள் ஊர் பொது மக்களுடன் காத்திருந்தார்.

அப்போது வந்த 41 வந்து நம்பர் அரசு பேருந்தை நிறுத்தி பேருந்து நடத்துனாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தில் இருக்கும் பயணிகளை இறக்கிவிட்டு வரட்டும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்ததின் அடிப்படையில் பொதுமக்கள் அரசு பேருந்து செல்ல அனுமதி அளித்தனர்.

அதன் பிறகு பயணிகளை காமராஜர் நகர் வரை சென்று இறக்கிவிட்டு மீண்டும் திரும்பி வரும்பொழுது பாளையம்புதூர் 4 ரோடு பகுதியில் மீண்டும் அரசு பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொப்பூர் காவல் ஆய்வாளர் மீண்டும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடத்துனர் மந்திரி மீதும், ஓட்டுனர் செந்தில்குமார் மீதும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் அடிப்படையில் அனைவரும் கலந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *