தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள செல்லமுடி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே.மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்தார். இவர் பள்ளி ஆசிரியர்களுக்கு, சத்துணவு பணியாளர், துப்புரவு பணியாளர்களுக்கு மற்றும் அலுவலக பணியாளர் அனைவரையும் பாராட்டி நற்சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *