தர்மபுரி மாவட்டம் எல்லைப் பகுதியில் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் மலைப்பாதை வழியாக 6 கிலோமீட்டர் தொலைவு வரை செல்கிறது. இந்த சாலை வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களும், வட மாநிலத்திற்கு செல்லக்கூடிய வாகனங்களும் தினமும் பல்லாயிர வாகனங்கள் செல்கின்றன. மலைப்பாதை வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் எஸ் வடிவிலான சாலையும், மேடு,பள்ளமான சாலையாகவும் உள்ளது. தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தொப்பூர் கணவாய் அருகே வரும்பொழுது தொடர்ந்து விபத்துகளில் சிக்குகின்றனர். இதன் காரணமாக தர்மபுரி மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வெள்ளக்கல் கட்டை மேடு அருகே கனரக வாகனங்களை நிறுத்தி வேக்கம் பரிசோதனை செய்து 8 பாயிண்ட் அளவிற்கு வந்தவுடன் வாகனங்களை செல்ல அனுமதிக்கின்றனர். இருந்தபோதிலும் சாலை பள்ளமாக இருப்பதினால் கனரக வாகனத்தை டிரைவர்கள் அதிவேகமாக ஓட்டி செல்வதினால் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே வரும்பொழுது விபத்தில் சிக்குகின்றன. இதனால் விபத்துக்களை தடுப்பதற்காக அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்கள் மீது ஆன்லைன் பைன் முறையும் போடப்பட்டது. தற்பொழுது சுங்க சாவடி பணியாளர்கள் தொடர்ந்து கனரக வாகனங்களை நிறுத்தி அனுப்புவதினால் விபத்துக்கள் குறைந்துள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் தடுப்பதற்காக தொப்பூர் கணவாயில் ஆஞ்சநேயர் கோயில் முதல் வளைவில் ஸ்பீட் ரேடார் கேமரா பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது. இந்த ஸ்வீட் ரேடார் கேமராவானது வேகமாக வரும் வாகனங்களை கண்டறிந்து ஆஞ்சநேயர் கோவில் முன்பாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் டிஸ்ப்ளே யூனிட் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேகமாக வரும் வாகனங்கள் குறித்த தகவல்களை இந்த டிஸ்ப்ளே யூனிட்டில் காண்பிக்கப்படும். அதிவேகமாக வரும் வாகனங்கள் மீது ஆன்லைன் மூலம் பைன் போடப்படும் என அதிகாரிகள் கூறுகின்றன. இந்த பணிக்காக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒரு வழி பாதையாக மாற்றி வாகனங்கள் செல்ல அனுமதி அளித்தனர். இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று எறும்பு போல் நகர்ந்து சென்றனர். இந்த போக்குவரத்தை சீர் செய்வதற்காக 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
