தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள இரயில்வே ஸ்டேஷன் பகுதியைச் சேர்ந்தவர் கமலேசன் மகன் சுதாகர் (25). இவர் இன்று விடியற்காலை எருமாம்பட்டி செல்லும் சாலையில் இருந்து டிராக்டரில் மண்ணை எடுத்துக் கொண்டு சந்திர நல்லூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருடன் உம்மியம்பட்டி பகுதியைச் சார்ந்த கிருஷ்ணன் மகன் கோவிந்தராஜ் (23) உடன் வந்துள்ளார். இந்த நிலையில் சந்திர நல்லூர் அருகே செல்லும் பொழுது சாலை ஓரம் பள்ளத்தில் டிராக்டரின் முன் சக்கரம் இறங்கியதால் டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதனால் டிராக்டரில் வந்த இருவரும் பள்ளத்தில் விழும் பொழுது எடுத்துவரப்பட்ட மண் இவர்கள் மீது கொட்டி மூடியது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது டாக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும் டிராக்டரில் வந்தவர்கள் மண்ணுக்கடியில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு மேலே கொட்டி உள்ள மண்ணை எடுத்துப் பார்த்தபோது இருவரும் மூச்சுத் திறனறி பரிதாபமாக இறந்த விவரம் தெரிந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் இரண்டு பிரதேசத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில் போலீஸ் கோட்ரஸ்-எருமாம்பட்டி செல்லும் சாலையில் பெட்ரோலிய பைப் லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக குழி எடுத்து மண்ணை சாலை ஓரம் கொட்டி இருந்துள்ளனர். அந்த மண்ணை டிராக்டரில் எடுத்து வரும் பொழுது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. தொப்பூர் பகுதியில் இரவு நேரத்தில் மண்ணை எடுத்து சென்று விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *