தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள மேல்புரிக்கல் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. மாரியம்மனுக்கு வருடம் வருடம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆடி மாதம் என்பதால் மாரியம்மனுக்கு கங்காணம் கட்டி விரதம் இருந்து பெண்கள் பால்குடம் எடுத்து ஊரை சுற்றி வந்து கோவிலுக்கு வந்தடைந்தனர்.

வீடியோவை முழுமையாக பாருங்கள் 👆

அதனை தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து விரதத்தை முடித்துக் கொண்டனர். அதன் பிறகு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தது. இந்த பால்குடம் ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *