தர்மபுரி மாவட்ட நல்லம்பள்ளியை அடுத்த இராமாயணசின்ன அள்ளியே சேர்ந்தவர் குப்புசாமி(62) ஆகும். இவர் சுயமாக வளையல் வியாபாரம் செய்து வருகிறார் இந்நிலையில் கடந்த 12 தேதியன்று வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள சாமிசெட்டிபட்டி கிராமத்தில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.இந்த விழாவில் வளையல் வியாபாரம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்த குப்புசாமி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ந்து போனார் வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.
அதேபோல சாமிசெட்டிபட்டியை அடுத்த கமல நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வனிதா (32)ஆகும்.இவரும் கடந்த 12 அன்று வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் வேலைக்கு சென்று வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 1/2 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள்,மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இரு ஊர்களிலும் திருடு போனது குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர்.அந்த விசாரணையில் வணியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் காட்டிஸ் (எ) காட்வின் மோசன்(27) , அதே பகுதியில் சேர்ந்த அண்ணாதுரை மகன் ஹரிஷ் (28) ஆகிய இருவரும் திருடி சென்றது தெரிந்தது. இவர்கள் இருவரையும் தொப்பூர் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 25 பவுன் நகையை மீட்டுள்ளனர்.
