தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலான அனைத்து பகுதிகளுக்கும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான வேகத்தில் இயக்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிகப்படியான சத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஏர் ஆரண் வைத்து சத்தத்தை எழுப்புகின்றன. இதனால் வாகன ஓட்டிகளுக்கும்,அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கும் மிகுந்த அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.
விபத்து:
இன்று மாலை பாலக்கோடு அருகே உள்ள கோடியூர் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த இரண்டு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் வந்த பயணிகள் சுமார் 50க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


