காரிமங்கலம் பேரூராட்சி உட்பட்ட 14-வது வார்டில் ரூபாய் 3.50 லட்சம் மதிப்பீட்டில் சின்டெக்ஸ் டேங்க் திறப்பு விழா


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 14வது வார்டு ஏரியின் கீழுர், முருக்கம்பட்டடி பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்து பொதுமக்களில் பயன்பாட்டிற்கு பேரூராட்சி தலைவர் பி சி ஆர் மனோகரன் தலைமை தாங்கி அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக தொடங்கி வைத்தார்.

இதில் துணைத் தலைவர் கே வி கே சீனிவாசன், காரிமங்கலம் வேளாண்துறை அட்மா முன்னாள் தலைவர் கணேசன், வார்டு கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் மாதப்பன், சத்திரமேஷ், சதீஷ்குமார், சுரேந்திரன், ராதாராஜா, சிவக்குமார், செவத்தா, ஊர் கவுண்டர் குப்பன், மு.கவுன்சிலர் ரகு, நகர இளைஞரணி அமைப்பாளர் அருள், துணை அமைப்பாளர் வசந்த், வார்டு கிளை செயலாளர் பழனி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *