தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல் அள்ளி ஊராட்சி கெங்கலாபுரம் பகுதியில் அருள்மிகு செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக அந்தப் பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர்.

செல்லியம்மன் சிலை மரத்துக்கு அடியில் இருந்த காரணத்தினால் அந்த பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து கோயில் கட்டலாம் என முடிவு செய்துள்ளனர். ஆனால் செல்லியம்மன் பக்தர்களின் மேல் வந்து அருள்வாக்கு கூறிய போது எனக்கு மேல் கூரை அமைத்து கோவில் கட்டக்கூடாது, நான் மரங்களுக்கு இடையில் தான் இருப்பேன் என அருள் கூறியதாம்.

அதன் அடிப்படையில் ஊர் பொது மக்கள் ஒன்றிணைத்து மேல் கூரை அமைக்காமல் சுற்றியுள்ள சுவர்களை உயர்த்தி கோவில் கட்டியுள்ளனர். இந்த கோயில் ஆனது கெங்கலாபுரம் தண்டுகாரம்பட்டி செல்லும் சாலை ஓரத்தில் அமைந்திருப்பதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அம்மனை வழங்கி செல்கின்றனர்.

தினமும் செல்லியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து திறந்தே இருக்கும். அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் வேண்டிய காரியங்கள் நிறைவேறினால் அதற்கு நேர்த்திக் கடனாக அம்மனுக்கு கோழி மற்றும் கிடாவெட்டி அன்னதானம் வழங்குவது சிறப்பாகும்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *