மேட்டூர் அணை நீர் வரத்து 1038 கன அடியாக அதிகரிப்பு.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1038கானா அடியாக அதிகரித்துள்ளது

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.75 அடியிலிருந்து 39.74 அடியாக குறைந்தது. அணயிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும்நீரின் அளவு வினாடிக்கு 227 கன அடியிலிருந்து 1038 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 11.95 டிஎம்சியாக இருந்தது.
நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது.

