சிவாடி இரயில் நிலையம் அருகே
கஞ்சா வைத்திருந்த நான்கு பேர் கைது.

தர்மபுரி மாவட்டத்தில் எல்ல பகுதியாக தொப்பூர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவாடி ரயில் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் அந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று தோப்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் வாகன தண்ணி கையில் ஈடுபட்டிருந்தன. அப்போது அந்த வழியாக வந்த 2 டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டூவீலரில் வந்த நான்கு பேரும் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை பரிசோதனை செய்தபோது சுமார் 400 கிராம் கஞ்சா வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் டூவீலரில் வந்த சிவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவா(22) மற்றும் வசந்த்(21), கெட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), அனுமந்தன் நகரை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *