தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாளையம்புதூர் கிராமம். இந்த கிராமத்தில் தமிழக வெற்றிக்கழகம் தொண்டர்கள் பாளையம் புதூர் 4 ரோடு பகுதியில் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் 2 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேனர்களையும் கிழித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரு பேனரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் இரண்டு கண்களையும் நோண்டியவாறு சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த தொப்பூர் உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல்,முருகேசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக வெற்றி கழக தொண்டர்கள் சாலை ஓரம் வைத்த 2 பேனர்களை மர்ம நபர்கள் கிழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *