இரு மாவட்ட எல்லையை இணைக்கக்கூடிய பழையூர் சோதனை சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை , தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு மாவட்ட எல்லை பகுதிகள் மாநில எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்தக் குழுவில் அதிகாரிகள் போலீசார் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்
இந்த தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சோதனை யிடுகிறார்கள். இந்த நிலையில் தர்மபுரி – சேலம் ஆகிய மாவட்டங்களை இணைக்கக்கூடிய பகுதியாக உள்ள பழையூர் சோதனை சாவடி பகுதியில் தர்மபுரி மாவட்ட தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு பென்னாகரம் ஒன்றியம் மேற்பார்வையாளர் செல்வம் தலைமையிலான குழுவினர் வெளி மாவட்டங்களில் இருந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் செல்லக்கூடிய வாகனங்களில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணம், பரிசுப் பொருட்கள் மற்ற ஏதேனும் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

