தர்மபுரி மாவட்டம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தமல்லிக்காரன் கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வரும் லோகநாதன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நல்லம்பள்ளி வட்டாட்சியருக்கு கடந்த மாதம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று ஆழ்துளை குழாய் அமைக்கும் பணி தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் நடைபெற தொடங்கியது. அதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஆழ்துளை குழாய் அமைக்கும் இடம் அரசுக்கு சொந்தமான நீர் ஓடை பகுதி நிலத்தில் ஆழ்துளை குழாய் அமைக்க கூடாது என தடுத்து நிறுத்தினர். இதனால் நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் தொப்பூர் போலீசார் பசுவராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு முறையாக அளந்து காண்பித்த பின்பு ஆழ்துளை குழாய் அமைக்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நில அளவைத் துறை சார்பாக அரசுக்கு சொந்தமான நீரோடையை பகுதியை அளவீடு செய்து பார்த்தனர். அப்போது ஆழ்துளை குழாய் அமைக்கும் இடம் பட்டா நிலம் என்பதால் அங்கு ஆழ்துளை குழாய் அமைக்க தடை விதிக்க முடியாது என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் வருவாய் துறை அளந்து கொடுத்ததில் எங்களுக்கு திருப்தி இல்லை என வாக்குவாதம் செய்தனர். அதற்கு வருவாய் துறையினர் முறையாக அளந்து காண்பிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மேலும் சந்தேகம் என்றால் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து அதன்பிறகு நிலத்தை அளந்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஆழ்துளை குழாய் அமைத்த இடம் நீரோடை பகுதி என்றால் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாயை மூடி விடுவோம் என சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் . அதனை அடுத்து பொதுமக்கள் ஆழ்துளை குழாய் அமைக்க அனுமதி அளித்தனர்.
அரசுக்கு சொந்தமான நீர்ரேடை பகுதியில் ஆழ்துளை குழாய் அமைக்கப்படுவதாக பொதுமக்கள் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *