தர்மபுரியில் மின் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல்.

தர்மபுரி கோட்டம் தர்மபுரி துணைமின் நிலையம்,பைசு அள்ளி துணை மின் நிலையம் மற்றும் சோலைக்கொட்டாய் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி செய்ய இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு இருக்கும் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ள தர்மபுரி நகரத்துக்குட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி ,ஏ.ஜெட்டிஅள்ளி, விருபாச்சிபுரம், மதிகோன்பாளையம், கோட்டை, நேதாஜி பைபாஸ் ரோடு, அரிச்சந்திர காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்

இன்று (2.07.2024) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தர்மபுரி தமிழ்நாடு மீன் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *