நாடு முழுவதும் மூன்று புதிய சட்டம் அமலுக்கு வந்தது. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் நீதி.

ஆங்கிலேயர்களின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் இன்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யும் இந்த புதிய சட்டங்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் -21 ல் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் (பி.எஸ்.ஏ.,) ஆகியன உருவாக்கப்பட்டன. பெண்கள் மீதான தாக்குதல், குழந்தைகள் தொடர்பான குற்றப்புகார்கள், வயது மூத்தவர்கள் பாதிப்புக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யும்.

தேச துரோகம் என்ற பிரிவு நீக்கப்பட்டு, பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தல், ஒற்றுமைக்கு எதிரான செயல் என சேர்க்கபட்டு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் மின்னஞ்சல் மூலம் புகார் பதிய முடியும். மேலும் இதற்கான எப்ஐஆர் நகல் பாதிக்கப்பட்டோர் டிஜிட்டல் மூலம் பெற்று கொள்ள வழி செய்யும். பாதிப்புக்குள்ளானவர்கள் காவல் நிலையம் போக வேண்டியது இருக்காது. தேவைப்படும் போது சென்றால் போதுமானது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும். மின்அஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப முடியும். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் உடனுக்குடன் நெருங்கிய உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கபட்டோருக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கப்படும்.

வீண் வாய்தாக்கள் இருக்காது, 14 நாட்களுக்குள் எப்ஐஆர், 2 மாதங்களில் விசாரணை முடிப்பு, 90 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற முடியும்.

60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் வரையப்பட வேண்டும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்கு மிகாமல் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

பாதிக்கப்படுவோர் எந்த காவல் நிலையத்திலும் புகார் மின்னணு அளிக்கலாம். காவல் எல்லை பிரச்சனை குறையும். காகித ஆவணங்கள் குறையும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படலாம். இது போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த சட்டங்கள் இன்று (ஜூலை1) முதல் அமலுக்கு வந்தது.

நீதி துறை, காவல் பிரிவினருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 17,500 காவல் நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் முதல் வழக்காக, டெல்லி மற்றும் மத்தியபிரசேத்தின் போபாலில் பதிவாகி உள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *