தருமபுரி மாவட்டம், இன்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி வயது (33) ஆகும். சரஸ்வதிக்கும், பழைய தருமபுரியை சேர்ந்த கணேசன் என்பவருக்கும் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 3 வருடத்திற்க்கு முன்பு கணவர் கணேசன் இறந்து விட்டார். இதனால் சரஸ்வதி இண்டூரில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். சொத்து தொடர்பாக கடந்த வாரம் மாமியாரை தாக்கிய வழக்கில், சரஸ்வதி நிபந்தனை ஜாமினில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்
சரஸ்வதிக்கும், தருமபுரி 13-வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெகன் என்பவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் இரு வருடத்திற்கு முன்பு ரகசிய திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதத்திற்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சரஸ்வதி, ஜெகனின் உறவை கைவிட்டு, இண்டூரில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார். ஜெகன் என்பவர், சரஸ்வதியிடம் தெடர்ந்து குடும்பம் நடத்த அழைத்து தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

நேற்று தருமபுரிக்கு சொந்த வேலையாக வந்த சரஸ்வதி, வேலையை முடித்து கொண்டு மீண்டும் வீட்டிற்க்கு செல்ல தனது ஸ்கூட்டி மூலம் இண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த ஜெகன் ஆட்டுகாரன்பட்டி என்ற இடத்தில் வந்தபோது சரஸ்வதியை, ஜெகன் வழிமறித்து குடும்பம் நடத்த வரும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார். சரஸ்வதி மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெகன் சாலையோரம் இருந்த கல்லை எடுத்து சரஸ்வதியின் தலையில் போட்டு காயம் ஏற்படுத்தி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த சரஸ்வதி உயிரை காப்பாற்றி கொள்ள வயல் வெளியில் இறங்கி ஓடி உள்ளார். அங்கு கூலி வேலை செய்யும் பெண்கள் சரஸ்வதியை ஜெகனிடம் இருந்து மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும் சரஸ்வதி சிகிச்சையில் இருந்த போது செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஜெகன் தனக்கு எதிராக ஏதாவது செய்ய நினைத்தால் உன்னை நான் என்ன செய்வேன் என்றே தெரியாது என கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சரஸ்வதி தருமபுரி நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், தி.மு.க கவுன்சிலர் ஜெகன் மீது போலீசார் 4 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஜெகனை தேடி வருகின்றனர்.

பெண் ஒருவர் மீது, தி.மு.க கவுன்சிலர் கொலை வெறி தாக்குதல் நடத்தி, அப்பெண்ணுக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *