தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள சேசம்பட்டி பிரிவு சாலையில் சுங்க சாவடி மற்றும் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பாகவும் 37ஆவது சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அப்போது தலைக்கவசம் உயிர்க்கவசம், இருசக்கர வாகனம் ஓட்டும்போது அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும், காரில் பயணிக்கும் போது இருக்கை பட்டையை அணிய வேண்டும், பாகல்பட்டி கெங்களாபுரம் சர்வீஸ் சாலையில் எதிர்திசையில் செல்லக்கூடாது என்ற பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் சுங்க சாவடி அலுவலர் ஞானசேகர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

