நல்லம்பள்ளி அருகே அரசு டவுன் பஸ் தனியார் காலேஜ் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து 20 பேர் படுகாயம். சாலை விரிவாக்கம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம் பள்ளி அருகே நாகாவதி அணை அருகில் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் தர்மபுரியில் இருந்து நாகாவதி அணை நோக்கி வந்த அரசு டவுன் பஸ் 2.B.மற்றும் சின்னம்பள்ளி பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த தனியார் காலேஜ் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கல்லூரி மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதே போல் அரசு டவுன் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் அரசு பஸ் இயக்கிய டிரைவர் பாரதிராஜா படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது .மேலும் தனியார் காலேஜ் பஸ் டிரைவர் பழனிவேல் லேசான காயங்களுடன் பென்னாகரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்தனர்.

இதில் காயம் அடைந்த கல்லூரி மாணவிகளை 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து அனைவரும் உயிர் தப்பினர். இது குறித்து அப்பகுதி மக்கள் இருபுறமும் சாலை குறுகிய நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து பெரும்பாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

முழுமையாக வீடியோ பார்க்க 👇👇👇👇👇

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *