தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் வாகன ஓட்டிகள் அனைவரும் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் வரும் அலுவலர்கள் மற்றும் பொது மக்களுக்கு அறிவுறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார். அதேபோன்று நேற்று தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த நோட்டீசை வழங்கி…

#இரண்டு சக்கர வாகன ஓட்டும் பொழுது ஹெல்மெட் அணியவில்லை எனில் 1000 அபராதம் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் முடக்கம்.

#சீட் பெல்ட் அணியவில்லை எனில் 1000 அபராதம்.

#வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தினால் அபராதம்

#ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5000 அபராதம்

#மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் முதல் முறை 10000 அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை. தொடர்ச்சியாக செய்து வந்தால் 15000 அபராதம் அல்லது இரண்டு வருடம் சிறை தண்டனை உள்ளது என கூறி வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தருமபுரி உள்ளூர் தொலைக்காட்சி CSK Tv,JPM Tv,லீகல் அவர்னஸ் சோசியல் வெல்பர், மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போலீஸ் இ-நியூஸ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *