தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது தண்டுகாரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகாமையில் தண்டுகாரம்பட்டி ஏரி மற்றும் பாப்பன்குட்டை ஏரி உள்ளது.கடந்த சில நாட்கள் முன்பு பெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையின் காரணமாக தண்டுகாரம்பட்டி ஏரிக்கு பாதி அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. இந்த நிலையில் தண்டுகாரம்பட்டியில் உள்ள இளைஞர்கள் ஒன்று கூடி சொந்த செலவில் வெளி ஊர்களில் இருந்து சுமார் 1000-க்கு மேற்பட்ட மீன் குஞ்சுகளை வாங்கி வந்து ஏரியில் விட்டுள்ளனர். இதன் மூலம் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஏரியில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும். அதன் பிறகு ஊர் பொதுமக்கள் நன்கு வளர்ந்துள்ள மீனை பிடித்து சமைத்து சாப்பிடுவார்கள் என கூறுகின்றனர்.
எனவே,ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் மீன் குஞ்சுகளை இளைஞர்கள் விலைக்கு வாங்கி வந்து ஏரியில் விட்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *