மை தருமபுரி அமைப்பின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் உறவினர்கள் இல்லாமல் ஆதரவின்றி இறந்தவர்களின் புனித உடல்களை எங்கள் உறவாக எண்ணி மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்து வருகிறோம். இதுவரை 100 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளோம். இறந்த நல்லடக்கம் செய்யப்பட்ட 100 புனித உடல்களும் யார் என்று தெரியாத சூழ்நிலையில் அவர்களின் ஆத்மா சாந்தியடைய ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ஆத்மாத்ம சாந்தி பூஜை மை தருமபுரி அமரர் சேவையினர் செய்தனர். ஆதரவற்ற இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் பணியானது ஓர் அஸ்வமேத யாகத்தின் பலனுக்கு சமமானது என வேதங்கள் கூறுகின்றன. இந்த பூஜையை ராமேஸ்வரத்தில் உள்ள ராமகிருஷ்ண ஐயர் அவர்கள் சிறப்பாக செய்து தந்தார். மை தருமபுரி அமரர் சேவை மூலம் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செயலாளர் தமிழ்செல்வன்,அருள்மணி ஆகியோர் ஆத்மா சாந்தியடைய ஆத்மாத்ம சாந்தி பூஜை செய்து வழிபட்டனர்.

