ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று காலை முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருவதால் கலை கட்டி வருகிறது ஒகேனக்கல் தளம். காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக குறைந்த அளவே நீர்வரத்து வந்ததால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்த அளவே காணப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரி நீரால் நேற்று முதல் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றன. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். மேலும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் குளித்து மகிழ்ந்து, மீன் சமையல் அருந்தி பின்பு முதலை பண்ணை, மீன் கண்காட்சியகம் உள்ளிட்டவைகளை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் காவிரி ஆற்றின் இயற்கை அழகை ரசிக்கும் வகையில் படகு மூலம் பரிசல் சவாரி செய்து உற்சாகம் அடைந்து செல்கின்றனர் இங்கு வரும் சுற்றுலா பயணிகள்.

By Raja

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *